ஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி

0

இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையும், மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் எஸ்தர் டஃப்லோ மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மைக்கேல் கிரெமரையும் சேர்த்து “உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான” ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடியபோது அபிஜித் பேனர்ஜி கூறிய கருத்துகள்: இந்திய அரசு ஊரடங்கு முடிந்தபின் ஏழை மக்களின் கைகளில் 60 சதவீதம் பணம் தொகை வழங்க வேண்டும். மக்கள் கைகளில் பணத்தைக் கொடுத்து செலவிடச் சொல்ல வேண்டும். அது தான் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த சிறந்த வழி.

அடுத்த ஆறு மாதங்களுக்கு அனைவருக்கும் தற்காலிக ரேசன் கார்டுகள் வழங்க வேண்டும். குறிப்பாக மாநில அரசுகளுக்கு உரிய பண உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். அந்தப் பணம் வீணடிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.200 லட்சம் கோடி ஆகும். இதிலிருந்து ஏழை களுக்கு ஒரு சிறிய தொகையே செலவிடப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை தளர்த்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலையை மாநில அரசு மட்டும் மாற்றிவிட முடியாது. புலம் பெயர்ந்த தொழிலாளர் வாழ்நிலையை மாற்ற மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறினார்.

Comments are closed.