சமூக நல்லிணக்கத்தை குலைக்க பாஜக உருவாக்கிய வாா்த்தை ‘லவ் ஜிகாத்’: -அசோக் கெஹ்லாட்

0

லவ் ஜிகாத் எனும் பெயரில் வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் லவ் ஜிகாத் பெயரில் மதமாற்றத்தை மேற்கொள்ள திருமணங்கள் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிராக பாஜக அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் லவ் ஜிகாத் என்ற சொல் பாஜகவினால் தயாரிக்கப்பட்டு தேசத்தை பிளவுபடுத்துவதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் கெஹ்லாட்: திருமணம் என்பது தனிநபா்களின் சுதந்திரம். அதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லவ் ஜிகாத் என்ற வாா்த்தையை பாஜக உருவாக்கி அரசியல் செய்து வருகிறது என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, உத்தர பிரதேசம், ஹரியானா, கா்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்’ எனப்படும் திருமணம் செய்து மதம் மாற்றும் செயலுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தன.

Comments are closed.