M.M.கல்பர்கி கொலை வழக்கை கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் SIT யிடம் வழங்கிய உச்ச நீதிமன்றம்.

0

M.M.கல்பர்கி கொலை வழக்கை கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் SIT யிடம் வழங்கிய உச்ச நீதிமன்றம்.

பிரபல சிந்தனையாளர் கல்பர்கி கொலை வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் நரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்விரு வழக்குகளில் ஒற்றுமைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனால் இவ்வழக்கின் விசாரணையை கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை முன்னேற்றங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தர்வாத் பெஞ்ச் கண்காணிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரபல பகுத்தறிவாதிகளும் இந்துத்வவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்களுமான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, எம்.எம்.கல்பர்கி, மற்றும் கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை ஒரே விசாரணை நிறுவனம் நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விருப்பம் தெரிவித்திருந்தது. இது இந்த கொலைகள் அனைத்திலும் ஒற்றுமை இருப்பதால் உச்ச நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டது.

முன்னர் தபோல்கர் கொலை வழக்கை மட்டும் விசாரித்துவந்த சிபிஐயிடம் இந்த நான்கு கொலைகளின் விசாரணையை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. தற்போது இந்த அனைத்து வழக்குகளுக்கும் தொடர்பு இருப்பதால் ஒரே சிறப்பு விசாரணை குழு இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக தரப்பு, இப்போது கெளரி லங்கேஷ் மற்றும் கல்பர்கி கொலை வழக்குகளை மகாராஷ்டிராவுக்கு மாற்றம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. தபோல்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பன்ஸாரே கொலை வழக்கு மகாராஷ்டிராவின் கொல்ஹாபூர் காவல்துறை சிறப்பு புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது. இந்த இரண்டு வழக்கின் விசாரணை முன்னேற்றத்தை பாம்பே உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்குப் பிறகு கல்பர்கி மற்றும் கெளரி லங்கேஷ் வழக்குகள் ஒரே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவினால் விசாரிக்கப்பட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும்.

Comments are closed.