மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

0

மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாக 39 வயது நபர் மிகக் கடுமைமிக்க சட்டமான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தூரின் தெற்கு தோடா பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் மாட்டிறைச்சி விற்றதால் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட கடையில் காவல்திறை சோதனை நடத்தியதில் அங்கு மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கடையின் உரிமையாளரை காவல்துறை கைது செய்தது. காவல்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிராக ஏற்கெனவே இந்தூர் மற்றும் உஜ்ஜைனில் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன என்று காவல்துறையினர் கூறினர்.

Comments are closed.