பாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்

0

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும்பட்சத்தில் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளன. மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. பருல் சாஹூ நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்தார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கமல் நாத் மற்றும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பருல் சாஹூ காங்கிரஸ் கட்சியில் இணைந்தது, மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இடைத்தேர்தல்கள் சில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டுமல்ல. முழு மாநிலமும் இந்த இடைத்தேர்தல்களை எதிர்பார்க்கிறது. பாஜகவின் மேற்கொண்ட மோசடி அரசியலுக்கு மக்கள் எவ்வாறு பொருத்தமான பதிலை அளிக்கிறார்கள் என்பதை அது காண்பிக்கும்” இவ்வாறு கமல்நாத் தெரிவித்தார்.

Comments are closed.