மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்

0

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒரு தலித் குடும்பத்தை அம்மாநில அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்தியுள்ளனர்.

மத்தியப பிரதேச மாநிலத்தின் அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்தலுக்கு பயந்து, குழந்தைகள், பெண்கள் பல ஒரு குடும்பமே கடந்த சில நாள்களாக ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு தஞ்சமடைந்துள்ளனர்.

தங்களது துன்புறுத்திய சுரேஷ் தாக்கத் ரத்கேடாவின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “போஹ்ரி பேரவை தொகுதியில் எங்களுக்கு வாக்குரிமை உள்ளது. எங்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. அதிலிருந்து எங்களை பாஜக அமைச்சர் சுரேஷ் தாகத் ரத்கேடாவின் உறவினர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். எங்கள் மீது பொய் வழக்குகளை போட்டும், வீடு புகுந்து அடித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். இது அனைத்தும் பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால்தான் என்கிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் ஊருக்கு செல்லப் போவதில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்காததால் நாங்கள் உள்ளுர் காவல் காவல் நிலையம் வெளியில் தஞ்சமடைந்துள்ளோம்” என்கிறார்.

Comments are closed.