கொரோனா விதிமுறைகளை மீறிய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு

0

கொரோனா விதிமுறைகளை மீறிய மத்திய பிரதேச பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவரான தினேஷ் பவ்சார். இவர் கடந்த 19ஆம் தேதி சன்வேர் தாலுகாவில் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் நடத்திய சாலை பேரணி கலந்துக்கொண்டார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அம்மாநிலத்தில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளது, இதனை மீறி தினேஷ் பவ்சார் பேரணியில் கலந்துக்கொண்டது சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து இந்தூர் காவல்துறையினர் தினேஷ் பவ்சார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து மேற்கொண்ட விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.