மத்திய பிரதேசத்தை போலவே மகாராஷ்டிராவிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம்

0

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரசின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை தனது பொருளாதாரத்தை வைத்து வாங்கிய பாஜக, காங்கிரஸ் ஆட்சியை கலைக்கும் வேலையில் மும்முரமாகவுள்ளது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்திருந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள், 20 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், “மத்தியப் பிரதேசத்தில் எப்படி ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியமைக்கிறதோ அதேபோல மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி அமைக்க முடியும்” என்று மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னதாக கூடணிக்கட்சியாக இருந்த பாஜகவும், சிவசேனாவும் மகாராஷ்டிராவில் வெற்றிப்பெற்று முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி  என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்தது சிவசேனா. பின்னர் அம்மந்நிலத்தின் ஆட்சியையும் அமைத்தது. ஆனால், மகாராஷ்டிராவில் ஏராளமான சிவசேனா எம்எல்ஏ-க்கள், பாஜகவுடன் தொடர்பில் இருப்பதுடன், அவர்களை வைத்தே மகாராஷ்டிராவில் ஆட்சியை கலைக்க பாஜக ஏற்பாடு செய்துவருவதாக தெரிகிறது.

Comments are closed.