மத்திய பிரதேசத்தில் கோட்சே பெயரில் கல்வி மையம் திறந்த இந்து மகாசபை

0

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்று படுகொலை செய்த கோட்சே பெயரில் மத்திய பிரதேசத்தில் இந்து மகாசபை கல்வி மையத்தை தொடங்கியுள்ளது

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாதுராம் கோட்சே பெயரில் அடங்கிய கல்வி மையம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மகா சபாவின் செயற்பாட்டாளர் கூறியதாவது:

1947-ல் இந்திய பிரிவினைக்கு பின்னால் இருந்தது காங்கிரஸ் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. எனவே வரும் தலைமுறையினருக்கு இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறை அறியும்படி செய்யவேண்டும்.

அவ்வகையில் நாதுராம் கோட்சே கல்வி மையம் இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இளம் தலைமுறையினருக்குத் தெரிவிக்கும். அதற்கான நூலகமாக இந்த மையம் விளங்குகிறது.

இந்த பயிற்றுவிக்கப்படும் கல்வியின் மூலம் குரு கோபிந்த் சிங். சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மஹாராணா பிரதாப், இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்களைப் பரப்பப்படும். இவ்வாறு இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியை கொன்றது யார் என்று கேட்டால், `நாதுராம் கோட்சே’ என்னும் வகையில்தான் அவர் பற்றிய அறிமுகம் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.