காஷ்மீர் விவகாரம்: ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கும்போது மௌனம் காக்க முடியாது- மலேசிய பிரதமர் மஹாதிர்!

0

காஷ்மீர் விவகாரம் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்ற மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மத் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுப் பேரவையில் தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசிய செய்தியாளர்களிடம் பேசிய அவர் அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முஹம்மத், இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பும் வன்முறையைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே மலேசியாவின் விருப்பம். வன்முறையை நாடக்கூடாது என்பதே மலேசியாவின் கொள்கை என்றும், எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை,  சட்டரீதியில் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும்.

இந்தியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடரவும் பாதுகாக்கவும் விரும்புகிறோம். அதேவேளையில் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து மௌனம் காக்க முடியாது’ இவ்வாறு தெரிவத்தார்.

Comments are closed.