ஜாகிர் நாயக்-ஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் மஹாதிர் திட்டவட்டம்!

0

ஜாகிர் நாயக்-ஐ மலேசியாவை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக அந்நாட்டிலுள்ள சீனர்கள் மற்றும் இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஜாகிர் நாயக் மீது அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தனது கருத்து மாற்றி கூறப்பட்டுள்ளது என தெரிவித்த ஜாகிர் நாயக், தனது பேச்சு குறித்து மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

Comments are closed.