மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு

0

பாஜக – சிவசேனா கூட்டணிக்கிடையே குழப்பம் காரணமாக, பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர பேரவையில் உள்ள 288 இடங்களில், 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களுக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என்று அக்கட்சி ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது.

பின்னேர், 56 எம்எல்ஏக்களுடன் திகழும் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க திங்கள்கிழமை இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு, ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார்.

54 எம்.எல்.ஏ-க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனா கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.

இந்நிலையில் சிவசேனாவுக்கு170 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.