தற்கொலை வழக்கு: அர்னாபும், பாஜக முன்னாள் முதல்வரும் இணைக் குற்றவாளிகள்

0

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை அர்னாபை கைது செய்தனர். தற்கொலை சம்பவத்தில் அர்னாபுக்கு உருதுணையாக செயல்பட்ட மூவரை அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு 2018ஆம் நடைபெற்று வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடத்தியது. “அன்றைய தினம் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அர்னாபுக்கு உதவி செய்துள்ளதாகவும், அர்னாபுடன் பட்னாவிஸையும் இணைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” என்று என்சிபி தலைவர் உமேஷ் பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.