அவுரங்காபாத் நகர் பெயரை மாற்ற சிவசேனா தீவிரம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

0

மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி புரிந்து வருகிறது. மாறுபாடு கொண்ட கொள்கையின் காரணமாக அவ்வபோது சலசலப்பு ஏற்பட்டு வடுகிறது.

இந்நிலையில் மகாரஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயர் மாற்ற  சிவசேனா- காங்கிரஸ் கட்சிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜிநகர் என மாற்ற சிவசேனா கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. தற்போது அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.

இதேபோல அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பெயர் மாற்றப்படும் என பாஜகவும் கூறியுள்ளது.

ஆனால் அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற மராட்டிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எனினும் காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜி நகர் என்றே குறிப்பிட்டு வருகிறார். அவுரங்காபத்தை சாம்பாஜிநகர் என அழைப்பது புதிதல்ல என்றும் அவர் கூறி வருகிறார். இந்நிலையில் அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.