மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு: நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

0

மகாராஷ்டிர மாநிலத்தில் சூழ்ச்சி செய்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று காலை சரியாக 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்க தொடங்கியது என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு.

அதில், மகாராஷ்டிராவில் இடைக்கால சபநாயகர் மூலம் நாளை மாலை 5 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ரகசிய முறையில் இல்லாமல் வாக்கெடுப்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தது.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Comments are closed.