மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி?

0

ஆளுநர் பரிந்துரையை அடுத்து, புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி காரணமாக, இன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

இதற்கு முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில் ஆட்சி அமைக்க தேவையான அளவு ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை அளிக்க ஆளுநரிடம் மூன்று நாள் கூடுதல் கால அவகாசம் கோரினோம். ஆனால், அவகாசமளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்’ என்றார் ஆதித்ய தாக்கரே.

இதனையடுத்து தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.