“உலகின் பிரபலமான இளம்பெண் மலாலா”- கௌரவித்தது ஐ.நா!

0

2020ஆம் ஆண்டு ஆரம்பமாவதையொட்டி கடந்த 10 ஆண்டுகளில் பல துறைகளில் சாதனைகள் புரிந்தோர்களை பல்வேறு அமைப்புகள் பாராட்டி கௌரவித்து வருகின்றன.

அந்த வகையில், பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்துவரும் 22 வயதான பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுஃப்ஜாய். 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தாக்குதலிலிருந்து தப்பித்த மலாலா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

பாகிஸ்தான் பெண்களின் கல்விக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவுக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பெண் என்ற கௌரவத்தை ஐக்கிய நாடுகள் சபை மலாலாவுக்கு அளித்துள்ளது.

Comments are closed.