பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்

0

மலேசியப் பிரதமர் மஹாதீர் பின் முஹம்மத் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார்.

பிரதமர் மஹாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்து உள்ளார். இவர் யுனைடெட் மலாய்ஸ் தேசிய அமைப்பு கட்சியில் இருந்தார். கடந்த 1981லிருந்து 2003ஆம் ஆண்டு வரை நான்காம் பிரதமராகப் பணியாற்றினார். பின்னர் 2003ஆம் ஆண்டு யுனைடெட் மலாய்ஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையெடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு பெர்சாத்து என்ற கட்சியை தொடங்கினர்.

இந்நிலையில் மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தேர்தலை சந்தித்த மகாதீர் வெற்றிபெற்றார். இவர் இந்த தேர்தலில் மற்றொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தார். இதனால் மலேசியாவின் 7வது பிரதமராக பணியாற்றினார்.

மஹாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மஹாதீருக்கு வயது 94 . தற்போது மஹாதீர் பின் முஹம்மத் பதவி விலக்கியதால் மலேசியாவில் மீண்டும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed.