“CAA சட்டம் மலேசியாவில் கொண்டுவந்தால் என்ன நடக்கும்?”- பிரதமர் மகாதிர்!

0

இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அப்போது இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் மலேசிய பிரதமர் மகாதிர் பின் முஹம்மது.

“மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவிமன் நடவடிக்கை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அனைவரும் பாதிக்கப்படுவர்.

“சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன? மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டடுள்ளது.” என்று மகாதிர் தெரிவித்தார்.

Comments are closed.