மனிதர்கள் மூலம் பரவும் நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறோம்: மம்தா பானர்ஜி

0
மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பனர்ஜி தலைமையில் செயல்படும் காவல்துறையும், அரசுத் துறையும் அதிகாரிகளும் நாடு தழுவிய ஊரடங்கை மாநிலத்தில் அமல்படுத்தவில்லை என்று அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊரடங்கு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று அம்மாநில பா.ஜ.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
தொடக்கத்தில் இருந்தே அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை திறம்பட செயல்படவில்லை என்று பொய் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறது பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு (IT).
இதற்கிடையே கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி மேற்கு வங்க அரசுக்க உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.
இவையனைத்து குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மம்தா பனர்ஜி, “குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. நாங்கள் மனிதர்கள் மூலம் பரவும் நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறோம். மதவாத நோய்த் தொற்றுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Comments are closed.