பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயனை பாஜக பெரிதுப்படுத்துகிறது- மம்தா பானர்ஜி

1

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயனை பெரிதுபடுத்துவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விண்வெளி சார்ந்த சாதனைகளை இந்தியா நிகழ்த்தியதே இல்லை என்பது போன்ற தோற்றத்தை பாஜக அரசு உருவாக்கி உள்ளது. இது நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே செய்யப்படுகிறது.

அரசியல் பழிவாங்குவதை கைவிட்டு பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதையே நானும் கூறுகிறேன்.

பத்திரிக்கை, நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் தூண்கள் மத்திய அரசின் ஆலோசனைப்படியே செயல்படுகின்றன” என தெரிவித்தார்.

Discussion1 Comment