“தோல்வியடைந்த டிரம்புக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” -மம்தா விமர்சனம்

0

தோல்வியை ஒப்புக்கொள்ளாத அமெரிக்க அதிபர் டிரம்பும், பாஜக-வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம்,  நடியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது: “மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு தனி விமானத்தில் பறந்து வரும் பாஜகவினர், விவசாயிகள் வீடுகளில் சாப்பிடுவதாக நாடகம் நடத்தி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிட்டு செல்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பாஜக-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தேர்தலில் தோல்வியடைந்த பின்னும் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். அதுபோலவே பாஜக-வும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வது இல்லை. டிரம்பும், பாஜக-வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது பாஜக அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது” இவ்வாறு மம்தா பேசினார்.

முன்னதாக,  டிரம்ப் போன்று சதிகார புத்திக் கொண்ட மம்தா பானர்ஜி, தான் தோல்வியுற்றாலும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்று பாஜக எம்.பி திலிப் கோஷ் தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply