என்.ஆர்.சி விவகாரத்தை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

0

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரானது.

இவ்வாறு பிரிவினைவாத நோக்கத்துடன் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை.அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, முஸ்லிம்கள் விடுப்பட்டு விடுவார்கள் என்று பா.ஜ.க. எதிர்பார்த்தது.

ஆனால், இந்திய குடியுரிமை, நிரூபிக்க இயலாத 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்துக்கள். என்.ஆர்.சி. விவகாரத்தை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில் பா.ஜ.க.வும், அதன் சார்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பங்கேற்கவில்லை. எனவே, தேசப்பற்று குறித்து காங்கிரஸ் கட்சிக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மும்பையில் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

Comments are closed.