பொருளாதார வீழ்ச்சி: உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசுகி நிறுவனம்!

0

கார் விற்பனை வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வருகிற 7 & 9 ஆகிய தேதிகளில் மாருதி சுசுகி தொழிற்சாலைகளை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால் அனைத்து முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. அன்றைய தினங்களுக்கு மட்டும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவை சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments are closed.