பிரதமருக்கான போட்டியில் மாயாவதி?

0

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை, தேசத்திற்கான தேவை, கட்சியின் நலன், பொதுமக்களின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுள்ளேன்.  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என முடிவு செய்துள்ளேன்.

உத்திர பிரதேசத்தியில் அமைத்துள்ள கூட்டணிகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளேன். எனது தனிப்பட்ட வெற்றியை விட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஆகையால் பணியாற்றி வருகிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய மாயாவதி, பிரதமருக்கான போட்டியில் உள்ளேன் என்பதை குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்பதால் எனக்கு எந்த ஒரு மனச்சோர்வும் கிடையாது என கூறியுள்ளார்.

Comments are closed.