சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்புரை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0

கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக தவறான செய்தி பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த உமர் பரூக் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர பொதுக்கூட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் அரசு அனுமதி பெற்று, தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வதந்திகள் பரப்பப்படுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சில வீடியோ காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதாக புகார் தெரிவித்ததார். அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையே ஒளிபரப்ப வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், டெல்லியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவிப்பதாகவும், அதனை ஊடகங்களும் மிகைபடுத்தி செய்தி வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி க்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

பாஜகவும் அதன் அமைப்புகளான சங்பவார்களும், சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். இந்த வெறுப்பு பிரச்சாரம் ஊடகங்களுக்கும் பரவியது. சில சேனல்களில் பத்திரிகையாளர்கள் எனக்கூறிக்கொண்டு சங்பரிவார்களாக செயபட்டு வருகின்றனர்.

Comments are closed.