7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது: ஆளுநருக்கு பாஜக பிரமுகர் கடிதம்

0

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது.

அந்த சட்ட மசோதா அமலாக்குவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, இடஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாஜக கட்சியினர் உட்பட பலரும் தெரிவித்ட்னு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார். இதனால் நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதான பாஜக அறிவித்துள்ளது.

Comments are closed.