பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்

0

பாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை பறித்த மத்திய பாஜக அரசு, அம்மாநில அரசியல் தலைவர்களை கடந்த 6 மாதமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதில் மெகபூபா முப்தியின் உள்ளார்.  மெஹபூபா முப்தியின் மகளான இல்திஜா முப்தியும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிறப்புப் பாதுகாப்புப் படையினரால் (எஸ்எஸ்ஜி) என்னை துன்புறுத்தி வருகின்றனர். எஸ்எஸ்ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி உளவுத்துறை, சிஐடி போலீசார் ஆகியோரும் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் எனது சுதந்திர உரிமையை பறிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

“நாட்டில் பல தீவிரமான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் என்னை போன்றவர்களுக்கு கட்டுப்பாடு விதித்து சுதந்திரத்தை பறிக்கின்றனர்” என்றும் இல்டிஜா சாடியுள்ளார்.

Comments are closed.