பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் கோடி கணக்கானோர் வேலைநிறுத்த போராட்டம்!

0

வங்கிகளை தனியார் மயமாக்கவோ, இணைக்கவோ கூடாது எனவும் மத்திய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைப்பு தொகைகளுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும். வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்ற 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றது.

வேலை நிறித்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் வெங்கடாசலம் கூறியதாவது: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன்னர். இதேபோல, பி.எஸ்.என்.எல் ரயில்வே, வருமான வரி, வேளாண் துறை உட்பட, பல்வேறு துறையைச் சேர்ந்த, 10 மத்திய தொழிற்சங்க உறுப்பினர்களும்,  வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

இதன்படி 25 கோடி அரசு ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 60 மாணவர்கள் சங்கத்தினரும், பல்வேறு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிரான போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.