டெல்லி காவல்துறைக்கு சிறுபான்மை ஆணையம் நோட்டீஸ்

0
ஊரடங்கு நடைமுறையில் உள்ள டெல்லியில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதும், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரம்காட்டிய முஸ்லிம் இளைஞர்கள் கைது உள்ளிட்ட விவகாரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவது டெல்லி சிறுபான்மை ஆணையம் டெல்லி காவல்துறை ஆணையருக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பை முன்னிட்டு நாடு முழுவதும் ஊடரங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால், வடகிழக்கு டெல்லி பகுதியில் தினந்தோறும் 10க்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. பொய் காரணங்களுக்காக நடைபெறும் கைதை கண்டித்து, ஏப்ரல் 2ம் தேதி இரவு 8 மணிக்கு முஸ்தபா பாத் பகுதியில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு சமயத்தில் எவ்வித காரணமுமின்றி, குற்றத்திற்கான சாட்சியமில்லாமல் தொடரும் கைதுகள் ஏற்கதக்கதல்ல. வடகிழக்கு காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் பதிலளிக்க சிறுபான்மை கமிஷன் முதலாவது நோட்டீஸை வழங்கியுள்ளது.

https://archive.org/details/mustafabad-women-02042020

மேலும் பள்ளிவாசலில் கூறப்படும் ஐந்து நேரத் தொழுகைக்கான அழைப்பொழி தடுக்கப்பட்டது குறித்தும், முஸ்லிம்கள் திறந்து வைத்திருந்த அத்தியாவசிய கடைகள் அடைக்கப்பட்டது குறித்தும் அந்த கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏப்ரல் 4 அன்று இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் ஏப்ரல் 3 அன்று இரவு 8 மணிக்கு முக்மேல்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது 200க்கும் மேற்பட்ட இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்தி, சூரையாடினர். மேலும் அங்குள்ள பொருட்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. மேற்கூரை அடித்து நெருக்கப்பட்டதற்கான வீடியோ ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலிபூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைநகரில் பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்திற்கு பிறகும் இதுபோன்ற வன்முறை சம்பவம் ஒரு தரப்பு மீது தொடர்வது கவலையளிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்தை மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.