நாட்டின் முதன்முதலில் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ

0

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் விவ்சாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் ஊர்வலம் நடந்தது. அப்போது பாஜக அரசு காவல்துறையை ஏவிவிட்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறை நிகழ்ந்தியது. அதில் விவசாயி ஒருவர் பலியானார், மேலும் பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹரியானா எம்எல்ஏ. ஹரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அபய் சவுதாலா என்பவர் டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து உள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவவாக முதன்முதலாக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே ஆகும்.

Comments are closed.