கும்பல் படுகொலைகளை தடுக்க பாஜக அமைச்சர்கள் குழு அமைப்பு

0

கும்பல் கொலைகளை தடுப்பது தொடா்பாக மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) எதிா்க்கட்சி எம்.பி.க்கள்  கேள்விகளை எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா பதிலளித்ததாவது:

கும்பல் கொலைகளை தடுப்பதற்கு, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆா்.பி.சி) ஆகியவற்றில் மேற்கொள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவும், மாநில அரசுகளும் உரிய பரிந்துரைகளை அளித்தபிறகு, ஐ.பி.சி, சி.ஆா்.பி.சி சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது, உச்சநீதிமன்ற தீா்ப்பை மத்திய அரசு நினைவில் வைத்துக்கொள்ளும் என்றாா் அமித்ஷா.

“இந்திய தண்டனைச் சட்டத்தில் ‘கும்பல் கொலை’ என்பதற்கு தனி விளக்கம் எதுவும் காணப்படவில்லை. கொலை குற்றம் புரிபவருக்கு மரண தண்டனையோ அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ அளிக்க இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-ஆவது பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுபவருக்கு ஜாமீன் வழங்கப்படமாட்டாது.

கும்பல் கொலைகளை தடுப்பதற்கு தேவையான சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைக்க அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

Comments are closed.