முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையால் அதிகம் பேசப்பட்ட நபராக மோடி உள்ளார் -டைம்ஸ் இதழ்

0

2020ஆம் ஆண்டின் உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சுந்தர் பிச்சை, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த முறை மோடியின் பெயர் அதிகம் பேசப்பட்டதற்கு காரணம் இந்திய முஸ்லிம்கள் மீது அவர் மேற்கொண்ட அடக்குமுறை தான் என்று டைம்ஸ் இதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மதசார்பற்ற இந்திய நாட்டில், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரை பிரதமராக பதவி வகித்தவர்கள் அனைவருமே இங்கு வாழும் 80 சதவீத இந்து மதத்தை சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடி மட்டுமே இந்து மதத்தின் காவலர் போலவும் அவர் ஒருவர் தான் இந்து மதத்திலிருந்து தேர்ந்தடுக்கப்பட்ட பிரதமர் போலவும் தன்னை முன்னிலைப்படுத்தி கொல்கிறார். குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது மோடி அடக்குமுறை செய்கிறார். இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட நபராக மோடி திகழ்கிறார்” என்று டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.மொ

Comments are closed.