ஜாகிர் நாயக்கிடம் தூது அனுப்பிய மோடி-அமித்ஷா!

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரின் நேரடி உத்தரவின்படி இந்திய அரசின் பிரதிநிதி இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஜாகிர் நாயக்-ஐ நேரில் சந்துத்து பேசியுள்ளார்.

மோடி மற்றும் அமித்ஷா சார்பாக ஒரு பிரதிநிதி தம்மை கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாத இறுதியில் சந்தித்ததாக ஜாகிர் நாயக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளிப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பிரதிநிதி ஒருவர் தனிப்பட்ட சந்திப்புக்கு வருமாறு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாகிர் நாயக், சந்திப்பின்போது பேசியதையும் தெரிவித்துள்ளார்.

“காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படுவதாக அந்த பிரதிந்தி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக வீடியோவில் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள ஜாகிர் நாயக், “இதே பாஜக அரசுதான் கடந்த மூன்றவரை ஆண்டுகளாக என்னை எதிரித்து வருகிறது. தற்போது அவர்களே என்னை பாதுகாப்பாக நாடு திரும்ப வைப்பதாக தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமிய நாடுகளுடன் நான் நெருக்கமாக உள்ளதால், இந்தியாவுக்கும் இஸ்லாமிய நாட்டுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக அந்தப் பிரதிநிதி என்னிடம் கூறினார்.

குர்ஆனுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஏதும் செய்யச் சொல்லாத வரையில் உங்களுடன் ஒத்துழைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரதிநிதியிடம் கூறினேன்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை மோடி அரசு ரத்து செய்ததை ஆதரிக்க வேண்டும் என பிரதிநிதி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன்.

என்னை பொறுத்தவரை 37வது சட்டப்பிரிவை ரத்து செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. அநீதியை ஆதரிக்கவோ, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைக்கவோ இயலாது என அவரிடம் உறுதிப்பட தெரிவித்தேன்”.

மேலும் பேசிய ஜாகிர் நாயக், “இந்தியாவின் அமலாக்கத்துறை, காவல்துறை, என்ஐஏ என எந்த முகமை குறித்தும் நான் பேசலாம் என்றும், பாஜக அரசுக்கும், பிரதமர் மோதிக்கும் எதிராக மட்டும் ஏதும் பேச வேண்டாம் என்றும் அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் சிலர் வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவு கொண்ட இஸ்லாமியர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்.

“பாஜக அரசை ஆதரிக் வேண்டும். எல்லாவிட்டாம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்லாமியத் தலைவர்கள் கண்டிப்பாக மிரட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் பாஜக அரசை ஆதரித்திருப்பார்கள்.

அநீதியை ஆதரிப்பது இஸ்லாத்திற்கு எதிரானது,” இவ்வறு ஜாகிர் நாயக் தெரிவித்தார்.

Comments are closed.