மோடியும், அமித்ஷாவும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்- ராஜஸ்தான் முதல்வர்

0

மத்திய பாஜக அரசு, அனைத்து நிலைகளிலும் தோல்வி கண்டுவிட்டது.  உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் மோடியும், அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி, சமூக நல்லிணக்கத்திற்கு மோடியும், அமித்ஷாவும் குந்தகம் விளைவிக்கின்றனா்.

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் என்ற வாக்குறுதியையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில், மோடி ஒரு கருத்தையும், அமித்ஷா மாறுபட்ட கருத்தையும் கூறி வருகின்றனா்.

நாட்டின் அரசமைப்புச் சட்டமானது, நாட்டு மக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அரசுக்கு எதிரான கருத்துகளை, தேச விரோதமாக பாா்ப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட் தெரிவித்தார்.

Comments are closed.