56 இன்ச் மார்புள்ள மோடி சீனா என்று சொல்லவே பயப்படுகிறார் -ராகுல் காந்தி

0

சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட மோடி பயப்படுகிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி 3வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசியவர் ‘அனைத்து இந்திய மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நரேந்திர மோடி தனக்கு விரிந்த மார்பு இருப்பதாக கூறி பெருமைபட்டுக்கொள்கிறார். ஆனால் சீன ராணுவம் இன்று இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது.

1000 கி.மீ இந்திய எல்லை சீன ராணுவத்தால் கைப்பற்றப்படிருக்கிறது. 56 இன்ச் மார்பு உள்ள நரேந்திர மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்ல முடியாதவராக இருக்கிறார். சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவராக இருக்கிறார் மோடி. கடந்த 4 மாதங்களாக சீனா என்ற வார்த்தையை அவர் எங்கும் உச்சரித்ததே கிடையாது.

சீனா இந்தியாவில் நுழைந்தபோது அப்படியாரும் வரவில்லை என மோடி பொய் சொன்னார். சில நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள். மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதாலும், மக்களை பிரித்தாழ்வதாலும்தான் சீன ராணுவத்திற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான தைரியம் வந்தது’ என்றார்.

Comments are closed.