வீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி

0

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடு மற்றும் கழிவறை கட்டமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மன்னார்குடி பகுதியில், வீடு கட்டித் தராமல் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பப்பட்ட மத்திய அரசின் கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு கட்டுவதற்காக ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும், அதன்பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்ல என கூறப்படுகிறது.

இதுவரை வீடு சம்பந்தமான எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், வீடு கட்டி முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்து தபால் மூலம் கடிதம் வந்துள்ளது.

“இது தொடர்பாக நாங்கள் பணமும் வாங்கவில்லை, வீடு கட்ட அதிகாரிகளும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் வீடு கட்டியதாக கடிதம் அனுப்பியிருக்கின்றனர்” என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.