“விளம்பரங்களையும், வெளிநாட்டு பயணங்களையும் நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு நிதி ஒதுக்குங்கள்” -சோனியா காந்தி

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தோல்வியுற்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி வருகிறது.

இந்நிலையில், மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “செலவினங்களை குறைக்கும் வகையில் வருங்காலங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து நிதியையும், பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் கொண்டு வந்து கொரானாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு, பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக தொலைக்காட்சி, ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1,250 கோடியை ஒதுக்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்றத்தை கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்காக கட்டலாம். மருத்துவ பணியாளர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடியை பயன்படுத்தலாம்” இவ்வாறு கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.