மடத்திற்குள் அரசியல் பேசிய மோடி: உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

0

நாடு முழுவதும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவத்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் பேசிய மோடி, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து பேசினார். அரசியல் தொடர்பில்லாத மடத்தில் அரசியல் குறித்துபேசிய மோடிக்கு மடத்தினுள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ராமகிருஷ்ணா மிடத்தின் உறுப்பினர்கள் சிலர் மோடியை ஏன் பேச அழைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணா மிஷன் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக ராமகிருஷ்ணா மிஷன் உறுப்பினர் கவுதம் ராய் கூறும்போது: “அரசியல் கருத்துக்களை மோடிக்கு இங்கு பேச அனுமதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக ராமகிருஷ்ணா மிஷன் அரசியல்மயமாகி வருகிறது. முன்பெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த ஆன்மிக தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர், பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அரசியல் தொடர்பில்லாத இடத்தில் இவ்வாறு பேசிருக்கக்குடாது என்று ராமகிருஷ்ணா மிஷன் பொது செயலலாளரான சுவாமி சுவிரானந்தா தெரிவித்தார்.

Leave A Reply