பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(!)

0

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை தலைவா்கள் மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

பெண்கள், குழந்தைகளுக்கு காவல்துறை மீது இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் காவலா்கள் செயலாற்ற வேண்டும். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் பொது அமைதியும், இயல்புநிலையும் நிலவுவதை காவல்துறையினா் உறுதி செய்கின்றனா். இதில் அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவா்களது குடும்பத்தினரின் பங்களிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

உத்தர பிரதேச மாநில, உன்னாவில், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வழக்கு விசாரணைக்காக ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்திற்க்கு சென்றபோது, சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உள்பட 5 போ் அந்த பெண்ணை வழிமறித்து தாக்கி, தீ வைத்துக் கொளுத்தினா். பின்னர் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

அதை போல தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் கைது செய்து போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.