சாவர்க்கரின் இந்துத்துவ சிந்தனைப்படி இந்தியா வழி நடத்தப்படும்- மோடி..!

0

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அகோலா, ஜால்னா ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்ததில் பிரதமா் மோடி கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மராத்தியர்களுக்கு தேசியவாதம், தேசபக்தி உணா்வுகள் அதிகம் உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் அந்த மாண்புகளை மறந்துவிட்டனா். காங்கிரஸ் கட்சிக்கு தேசபக்தி இல்லை; ஒரு குடும்பத்தின் மீதுதான் பக்தி உள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், “வி.டி.சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் மட்டுமல்லாது பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் இது குறித்தும் பேசிய மோடி, “இந்துத்துவ சிந்தாந்தவாதியான விநாயக் தாமோதா் சாவா்க்கரின் மாண்புகள் தான், தேசம் கட்டமைப்பதற்கான அடிப்படை” என்றார் மோடி.

Comments are closed.