‘நடப்பது கும்பல் படுகொலை தான்.. ஆனால் கும்பல் படுகொலை என சொல்லாதீர்கள்’- மோகன் பகவத்

0

கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களை ‘கும்பல் படுகொலை’ என சொல்லாதீர்கள். ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்புரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், ‘நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ‘கும்பல் கொலை’ என்ற வார்த்தையை கூற வேண்டாம். கும்பல் கொலை என்ற வார்த்தை இந்தியாவின் பூர்விகம் அல்ல. அது மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தது என மோகன் பகவத் கூறினார்.

காங்கிரஸ் விமா்சனம்

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறிய கருத்தை விமா்சித்து அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் சச்சின் சாவந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்திலிருந்துதான் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவம் அரங்கேறத் தொடங்கியது. ஆனால், அதில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தொடா்பில்லை என்று கூறுவது மிகப் பெரிய பொய்யாகும். பொய்களைப் பரப்புவதே சங்பரிவார்களின் சித்தாந்தம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.