ரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..!

0

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வரும் நன்கொடை தொகையை ஓராண்டிற்குள் தெரிவிக்கவேண்டும். அதன்படி,  பாஜக, கடந்த 2018-19ஆம் ஆண்டில் தனி நபா், நிறுவனங்கள், தோ்தல் அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மூலமாக ரூ.700 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த 700 கோடி ரூபாயில் 356 கோடி ரூபாய், டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அறக்கட்டளை சார்பில், பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.20,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையை காசோலை மற்றும் இணையவழி பரிவா்த்தனை மூலம் நன்கொடை பெற்ற விவரங்களை பாஜக அறிவித்துள்ளது. இருப்பினும், தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை பாஜக தெரிவிக்கவில்லை.

Comments are closed.