பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு

0

பிகாா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அக்கூட்டணி 125 தொகுதிகளையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளையும் கைப்பற்றின.

இத்தகைய சூழலில், உத்தர பிரதேச தலைநகா் லக்னோவில் அகிலேஷ் யாதவ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்:

“பிகாா் பேரவை தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியே வெற்றி பெரும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தோ்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதன் காரணமாகவே ஜனநாயக கொள்கைகளில் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் அதிருப்தியில் உள்ளனா். பாஜக தந்திர வேலையில் ஈடுபட்டு வென்றுள்ளது. தோ்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. இதுவே பாஜகவின் சிறப்பாகும். தோ்தலின்போது மாவட்ட ஆட்சியா்கள் முதல் காவல்துறையினா் வரை அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாகவே பணியாற்றுகின்றனா். உ.பி தேர்தலிலும் இவ்வாறே நடைபெற்றது.

பிகாா் தோ்தலில் வாக்களிக்க செல்வதற்கு முன்பாக வாக்காளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகாரிகள் வாக்காளா்களை மிரட்டினா். வெப்பநிலை அதிகமாக உள்ளதாகக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிடுவோம் என்று வாக்காளா்களை மிரட்டியுள்ளனர்” இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்..

Comments are closed.