மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற விவசாய கடன் ஊழல் அம்பலம்

0

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற விவசாய கடன் ஊழல் அம்பலம்

மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று உறுதியளித்திருந்தது. இதனை அடுத்து எந்தெந்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று அரசு விசாரித்த நிலையில் முந்தைய பாஜக அரசில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்கிற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் புதிய காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 2 லட்சத்திற்கு குறைவான கடன் பெற்றவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதற்கு ஒரு மாதம் பிறகு சுமார் 25 வங்கிகளிடம் இருந்து 50000 கோடி மதிப்பாளான கடன் பெற்றவர்களின் பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.

பஞ்சாயத் அளவில் விவாசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கடன் பெற்ற விவசாயிகளின் பெயர்களை மாநில அரசு தயார் செய்த நிலையில் பல விவசாயிகள் தாங்கள் எந்த விதமான கடனையும் அரசிடம் இருந்தோ அல்லது வேறெந்த வங்கியிடமிருந்தோ பெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இது முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரும் நிதி மோசடி என்றும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் கோவிந்த் சிங் கூறுகையில், “இது மிகப்பெரிய ஊழல். இதனை நாங்கள் விசாரிப்போம்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களாக கூட்டுறவு ஊழியர்கள் ஏழை விவசாயிகளின் பணத்தையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு இருக்க அந்த விவசாயிகளின் பெயர்களோ கடனை திருப்பித் தராதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சினூர் கூட்டுறவு வங்கி மேலாளர் முகேஷ் மாதுர் என்பவரை 120 கோடி மோசடி தொடர்பாக காவல்துறை கைது செய்துள்ளது. இதுவும் மாநில முதல்வரின் அழுத்தத்தின் பெயரால் நடந்ததது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் அரசு, கடன் தள்ளுபடி என்கிற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என்று பாஜக அரசு குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.