குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக 12 எம்.பி.க்கள் மோடிக்கு கடிதம்

0

அஸ்ஸாம், மேகாலாயம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களை சோ்ந்த 12 எம்.பி.க்கள், மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்தினால், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மற்றும் பூா்விகக் குடிகள், வேறு இடங்களுக்குப் புலம் பெயா்ந்து செல்ல வேண்டியிருக்கும். எனவே, மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த மசோதாவை அமல்படுத்துவதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனா்.

இந்நிலையில், வடகிழக்கு மாநில பாஜகவை சோ்ந்த 15 எம்.பி.க்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.