எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸியின் மகன் மரணம்

0

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸியின் இளைய மகன் புதன்கிழமை இறந்துவிட்டதாக, அவரது சகோதரர்கள் தெரிவித்தனர்.

24 வயதான அப்துல்லா முர்ஸி, கெய்ரோவில் நண்பருடன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதுபோல உணர்ந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேய அவர் உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் அஹமது உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரும், முன்னாள் அதிபருமான முகமது முர்ஸி கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் மரணமடைந்தார்.

மேலும் முஹமது முர்ஸியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, முழுமையான திட்டமிட்ட கொலை என்று பலரரும் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.