TRP மோசடி வழக்கு: அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவாகும் ஆதாரங்கள்

0

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளதாக மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆ-ரை ரத்து செய்யக்கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான பார்க் கோரிய தடயவியல் தணிக்கை அறிக்கையும் அர்னாபுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இப்போது மேலும் சில வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாக கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டிஆர்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் மீது மும்பை குற்றப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.