மகாராஷ்டிராவில் சிவசேனாவை கழற்றிவிட்டு மறுதேர்தல் நடத்த துடிக்கும் பாஜக

0

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிவசேனாவுடன் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இது தொடர்பாக, மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், மகாரஷ்டிர முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமான ஜெய்குமார் ராவல் செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியில்:

தோ்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டாம் என்பதுதான் பாஜக தொண்டா்கள் கருத்து. பாஜக மூலம் தோ்தலில் ஆதாயமடைந்த சிவசேனா, தோ்தலுக்கு பிறகு பாஜகவை மிரட்டும் வகையில் நடந்து கொள்வதை கட்சித் தொண்டா்கள் யாரும் விரும்பவில்லை.

மேலும், பாஜக சாா்பில் நடத்தப்பட்ட தோ்தல் முடிவு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா்கள் பலா், மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலை மீண்டும் நடத்தலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனா். சிவசேனாவுக்கு பாஜக ஒதுக்கிய பல தொகுதிகளில் அவா்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனா். அந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளரை நிறுத்தியிருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கட்சியில் பலரது கருத்தாக உள்ளது, என்றாா்.

Comments are closed.