சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த பாஜக நிர்வாகி கைது!

0

பாஜக தலைவர் சந்தீப் கோபிநாத் மாலி, சிறுமியை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் வசித்து வருபவர் சந்தீப் கோபிநாத் மாலி. இவர் பாஜகவின் கல்யாண் நகர துணை தலைவராக பதவி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல், மும்பையைச் சேர்ந்த ஒரு சிறுமியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.

சிறுமிக்கு 13 வயதிலிருந்து, கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தற்போது சிறுமிக்கு 17 வயதாகும் நிலையில், அவர், தனது பெற்றோருடன் மண்படா காவல்நிலையத்தில், பாஜக தலைவர் சந்தீப் கோபிநாத் மீது புகார் அளித்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் சந்தீப் கோபிநாத் மாலி மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாதர் சங்க நிர்வாகி கூறுகையில், “நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கடமை அந்நாட்டு அரசுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக உள்ளது. நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவர்களே பெண்களுக்கு பாலியல் தொல்லை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பொரும்பாலான வழக்கில் பாஜகவினர்களுக்கு தொடர்பு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.